தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது

 தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது

 தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது


ADDED : ஏப் 27, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்தான்புல்: போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சலீம் டோலா, 59, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கைது செய்யப்பட்டார்.

முக்கிய குற்றவாளி சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் சலீம் டோலா மீது நம் நாட்டில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், 10 வழக்குகள் உள்ளன.

குறிப்பாக, மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 252 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி., எனப்படும் மெபெட்ரான் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இவராவார்.

புலனாய்வு அமைப்புகளின் தரவுகளின்படி, ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச செயற்கை போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை டோலா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

துபாயை மையமாக வைத்து தன் செயல் பாடுகளை ஒருங்கிணைத்து வந்த இவர், நிழல் உலக தாதா என அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிமின் 'டி -  கம்பெனி'யுடன் நெருங்கிய தொடர்பில் இ ருந்ததாக கூறப்படுகிறது.

'ரெட் கார்னர்' நம் மத்திய புலானாய்வு அமைப்பின் கோரிக்கையின் பேரில், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் விடுத்திருந்தது.

ஐ க்கி ய அரபு எமிரேட்சின் போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி, துருக்கியின் இஸ்தான்புல்லி ல் அவர் மறைந் து வாழ்ந்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில், துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் சலீம் டோலா பிடிபட்டுள்ளார்.

தற்போது, சலீம் டோலா துருக்கி போலீசாரின் காவலில் உள்ளார்.

இந்தியாவுக்கும், துருக்கிக்கும் இடையே நேரடி நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லாததால், அவர் வைத்திருக்கும் போலி யு.ஏ.இ., பாஸ்போர்ட் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் உதவியுடன் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, கடந்தாண்டு சலீம் டோலாவின் மகன் தாஹிர் டோலா மற்றும் அவரது உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோர் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us