ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை; வங்கதேச தலைவர் முகம்மது யூனுஸ் சொல்வது இதுதான்!
ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை; வங்கதேச தலைவர் முகம்மது யூனுஸ் சொல்வது இதுதான்!
ADDED : மார் 05, 2025 08:34 PM

டாக்கா: ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வரவில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகம்மது யூனுஸ் கூறினார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா, 77, மாணவர் போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அந்நாட்டில் முகமது யூனுாஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ஐ.சி.டி.,) ஹசீனா மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வங்கதேச அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் பதில் எதுவும் தரப்படவில்லை.
இந்நிலையில், முகம்மது யூனுஸ் கூறியதாவது:
ஹசீனா மீது பல்வேறு கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளது. ஹசீனா வங்கதேசத்தில் உடல் ரீதியாக இருந்தாலும் சரி அல்லது இல்லாதிருந்தாலும் சரி, இந்தியாவில் நீதிமன்றத்தை எதிர்கொள்வார். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து, தான் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் கூறுகிறார்.
ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வமான பதில் இந்தியாவிடம் இருந்து வரவில்லை.
இவ்வாறு முகம்மது யூனுஸ் கூறினார்.