தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஜன., முதல் டாக்கா- கராச்சி இடையே நேரடி விமான சேவை

ஜன., முதல் டாக்கா- கராச்சி இடையே நேரடி விமான சேவை

ஜன., முதல் டாக்கா- கராச்சி இடையே நேரடி விமான சேவை


ADDED : டிச 29, 2025 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்கா: டாக்கா - கராச்சிஇடையே நேரடி விமானங்கள் ஜனவரியில் தொடங்க வாய்ப்புள்ளது என்று வங்க தேசத்திற்கான பாக்., ஹை கமிஷனர் தெரிவி்த்துள்ளார்.

வங்க தேசத்திற்கான பாக்., ஹை கமிஷனர் இம்ரான் ஹைதர் இடைக்கால அதிபர் முஹம்மது யூனுஸை சந்தித்து பேசினார் .

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இருதரப்பு வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.மருத்துவ அறிவியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வங்காளதேச மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு வரும் ஜன., முதல் டாக்கா கராச்சி இடையே விமான சேவை துவங்க உள்ளது.இவ்வாறு இம்ரான்ஹைதர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us