பிரான்ஸ் பார்லிமென்ட் கலைப்பு: அதிபர் மெக்ரோன் அறிவிப்பு
பிரான்ஸ் பார்லிமென்ட் கலைப்பு: அதிபர் மெக்ரோன் அறிவிப்பு
UPDATED : ஜூன் 10, 2024 10:23 PM
ADDED : ஜூன் 10, 2024 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரீஸ்: பிரான்ஸ் பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக இமானுவெல் மெக்ரோன் உள்ளார். இவரது பதவி காலம் 2027-ல் நிறைவடைகிறது.
இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்திட வேண்டி பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், பாராளுமன்றத்திற்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 07 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதிபர் இமானுவெல் மெக்ரோனின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.