மோடி மீது எனக்கு வெறுப்பா ? : அவரது கருத்தில் உடன்பாடில்லை என்கிறார் ராகுல்
மோடி மீது எனக்கு வெறுப்பா ? : அவரது கருத்தில் உடன்பாடில்லை என்கிறார் ராகுல்
ADDED : செப் 10, 2024 07:06 PM

வாஷிங்டன்: மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.
3 நாள் பயணமாக கடந்த 08-ம் தேதி அமெரிக்கா சென்றார் ராகுல். டெக்ஸாசில் ஜார்ஜ் டவுண் பல்கலை. ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார். இதன் வீடியோ காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூரவ் ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் பிரதமர் மீது ஏன் வெறுப்புணர்வு இருக்கிறது ? என்ற கேள்விக்கு,ராகுல் பதில் அளித்து பேசுகையில்,
நான் மோடியை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கென வேறுபட்டதொரு கண்ணோட்டம் உள்ளது, எனக்கென ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார். ராகுலின் கருத்திற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

