தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/காப்பி அடிக்கிறாரா அமெரிக்க அதிபர்?

காப்பி அடிக்கிறாரா அமெரிக்க அதிபர்?

காப்பி அடிக்கிறாரா அமெரிக்க அதிபர்?


ADDED : பிப் 01, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது, புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, 1,000 அமெரிக்க டாலர் குழந்தையின் வங்கிக் கணக்கில் வைக்கப்படும்.

இந்த பணத்தை, 18 வயதான பிறகே அவர்களால் எடுக்க முடியும். 2025 ஜன., 1 முதல் 2028 டிச., வரை பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். அந்த குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதோடு, அமெரிக்க சோஷியல் செக்யூரிட்டி எண் வைத்திருக்க வேண்டும்.

இந்த திட்டம், ஏற்கனவே நம் நாட்டின் ஐந்து மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதன் முறையாக, 1992ல் தமிழகத்தில் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இத்திட்டத்தை கொண்டு வந்தார். ஒருவருக்கு ஒரே பெண் குழந்தை இருந்தால், அந்த குழந்தையின் பெயரில் 50,000 ரூபாய் நிரந்தர வைப்பு வாயிலாக வங்கியில் வரவு வைக்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின், இருவருக்கும், தலா 25,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இவர்களுக்கு, 18 வயதாகும் போது இந்த பணம் அவர்களுக்கு கிடைக்கும். 'இதே திட்டதை தான் டிரம்ப் காப்பி அடித்துள்ளார்' என்கின்றனர். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, பதவிக்காக எதுவும் செய்வர் என்பது நம் நாட்டுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பொருந்தும் என்பதை, டிரம்பின் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us