பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
UPDATED : மார் 19, 2025 08:37 AM
ADDED : மார் 19, 2025 08:00 AM

நியூயார்க்: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் புளோரிடா அருகே கடற்கரையில் விழுந்த போது, சுற்றி சுற்றி ஏராளமான டால்பின்கள் வந்தன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். மீண்டும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். டிராகன் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் வேகமாகச் சென்று மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தன.