முன்பைவிட வலிமை பெறப்போகும் அமெரிக்கா; நாட்டு மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த டிரம்ப்
முன்பைவிட வலிமை பெறப்போகும் அமெரிக்கா; நாட்டு மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த டிரம்ப்
ADDED : டிச 18, 2025 10:47 AM

வாஷிங்டன்: இன்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கும் அதிபர் டிரம்ப், 'இதுவரை இல்லாத அளவில் அமெரிக்கா வலிமை பெறப்போகிறது,' என்று கூறியுள்ளார். இதனால், அவர் எதைப்பற்றி பேச இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம், வெனிசுலாவுடனான போர் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னிலையில் உள்ள சவால்களாகும். இந்த சூழலில், இன்றிரவு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இன்றிரவு நான் எதைப்பற்றி உரையாற்றுகிறேன் என்றால், நாம் குழப்பமான மரபைக் கொண்டுள்ளோம். தற்போது, நாங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்து முடித்துள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா வலிமைப் பெறப் போகிறது,' எனக் கூறினார்.
அதிபர் டிரம்ப் எதைப் பற்றி உரை நிகழ்த்தப் போகிறார் என்பது பற்றி வெளிப்படையாக கூறாத நிலையில், வரி விதிப்பு போல ஏதேனும் புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறாரா? அல்லது வெனிசுலா பற்றிய அறிவிப்பாக இருக்குமா? என்று மக்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

