ADDED : ஆக 07, 2025 09:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றார். அங்கு அந்நாட்டு முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை அவர் கூறுகையில், அதிபர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினை, அஜித் தோவல் இன்று இரவு சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். இதனை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது.