sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 போதைப்பொருள் தாதா சுட்டுக்கொலை: மெக்சிகோ நாடு முழுதும் வன்முறை

/

 போதைப்பொருள் தாதா சுட்டுக்கொலை: மெக்சிகோ நாடு முழுதும் வன்முறை

 போதைப்பொருள் தாதா சுட்டுக்கொலை: மெக்சிகோ நாடு முழுதும் வன்முறை

 போதைப்பொருள் தாதா சுட்டுக்கொலை: மெக்சிகோ நாடு முழுதும் வன்முறை

3


UPDATED : பிப் 24, 2026 10:37 PM

ADDED : பிப் 24, 2026 12:32 AM

Google News

3

UPDATED : பிப் 24, 2026 10:37 PM ADDED : பிப் 24, 2026 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ போதைப்பொருள் மன்னன், எல் மெஞ்சோ சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுதும் வன்முறையில் ஈடுபட்டனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், பல போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருந்தாலும், இரு அமைப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இ வை அரசுக்கே சவால் விடும் வகையில் பலம் உடையவையாக திகழ்கின்றன. இதில் ஒன்று சி.ஜே.என்.ஜி., எனும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' என்ற அமைப்பாகும்.

அதிரடி நடவடிக்கை


இந்த அமைப்பின் தலைவனான 'எல் மெஞ்சோ' என அழைக்கப்படும் நெமேசியோ ஓசெகுவேரா செர்வாண்டஸ், 59, மெக்சி கோ ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், அவர்களை கட்டுப்படுத்தவும் மெக்சிகோ அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இதை யடுத்து, மெக்சிகோ ராணுவ அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

சிறப்பு படைகள் மற்றும் விமானப்படையின் உதவியுடன் எல் மெஞ்சோவை கைது செய்ய, ராணுவம் தேடுதல் வேட்டையை துவக்கியது .

இதில் எல் மெஞ்சோ, மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள தபால்பா நகரில் பதுங்கியிருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

எல் மெஞ்சோவை ராணுவம், நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்தது. அப்போது, சி.ஜே.என்.ஜி., அமைப்புக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எல் மெஞ்சோ உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்த எல் மெஞ்சோ மற்றும் இருவரை பாதுகாப்புப் படையினர் மீட்டு, மெக்சிகோ சிட்டி நகருக்கு விமானம் வாயிலாக கொண்டு சென்ற போது, வழியிலேயே எல் மெஞ்சோ உயிரிழந்தார். இம்மோதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ராணுவ வாகனங்களை அழிக்கும் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு


தங்கள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும், சி.ஜே.என்.ஜி., அமைப்பினர் நாடு முழுதும் வன்முறையில் இறங்கினர்.

வன்முறையை அடுத்து, ஜாலிஸ்கோ மாகாண கவர்னர் பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். அண்டை நாடான குவாத்தமாலாவும் தன் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷை ன்பாம், அந்நாட்டு மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும் பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து மாகாண அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் உறுதி அளித்தார்.

வன்முறையால் பதற்றம்

தங்கள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும், சி.ஜே.என்.ஜி., அமைப்பினர் நாடு முழுதும் வன்முறையில் இறங்கினர். நெடுஞ்சாலையில் சென்ற பஸ்கள், லாரிகள் மற்றும் கார்களை வழி மறித்து, பயணியரை இறக்கிவிட்டு, வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். கடைகள் சூறையாடப்பட்டன. போக்குவரத்தை முடக்கி, ராணுவத்தை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கான ஒரு உத்தி இது. ஜாலிஸ்கோ மாகாணத்தின் முக்கிய விமான நிலையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பயணியர் அனைவரும் தரையில் படுத்து தங்கள் உயிர்களை காத்துக் கொண்டனர். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வன்முறை பல்வேறு மாகாணங்களுக்கு பரவியதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இது, போர் சூழல் போன்ற தோற்றத்தை மெக்சிகோவில் ஏற்படுத்தியுள்ளது.



யார் இந்த மெஞ்சோ?

மெக்சிகோவின் மிகோகனைச் சேர்ந்தவரான எல் மெஞ்சோ, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1990ல் ஹெராயின் கடத்தலுக்காக அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்தவர். தண்டனைக்குப் பின் மெக்சிகோ திரும்பிய அவர், 2009ல் சி.ஜே.என்.ஜி., என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை நிறுவினார். இது, அந்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் அமைப்பாக நாளடைவில் மாறியது. ட்ரோன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை பயன்படுத்தி, வன்முறையை பரப்புவதில் இவர் கைதேர்ந்தவர். இவரைப் பிடிக்க அமெரிக்கா, 135 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது.



இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

மெக்சிகோவில் நடந்து வரும் வன்முறைகளை அடுத்து, அங்கு நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, மெக்சிகோவிற்கான இந்திய துாதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு அவசரகால ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளில் உள்ள இந்தியர்கள் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று, உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமுள்ள இடங்கள், பாதுகாப்பு படையினர் நடவடிக்கை நடக்கும் இடங்களுக்கு செல்வதையும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. தங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.








      Dinamalar
      Follow us