sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு போதைப்பொருள் காரணமில்லை: வெனிசுலாவில் கொட்டி கிடக்கும் கச்சா எண்ணெயே குறி

/

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு போதைப்பொருள் காரணமில்லை: வெனிசுலாவில் கொட்டி கிடக்கும் கச்சா எண்ணெயே குறி

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு போதைப்பொருள் காரணமில்லை: வெனிசுலாவில் கொட்டி கிடக்கும் கச்சா எண்ணெயே குறி

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு போதைப்பொருள் காரணமில்லை: வெனிசுலாவில் கொட்டி கிடக்கும் கச்சா எண்ணெயே குறி

7


UPDATED : ஜன 05, 2026 06:51 AM

ADDED : ஜன 05, 2026 12:34 AM

Google News

UPDATED : ஜன 05, 2026 06:51 AM ADDED : ஜன 05, 2026 12:34 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரகாஸ்: 'அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு போதைப்பொருள் கடத்தல் முக்கிய காரணமில்லை. தங்கள் நாட்டில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான எண்ணெய் வளங்களை குறிவைத்தே அமெரிக்கா ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ளது' என, வெனிசுலா அதிபர் மதுரோவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா, நிரூபிக்கப்பிட்ட கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகளில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.

முதலிடம்


'ஆயில் அண்டு காஸ்' என்ற பத்திரிகை 2023ல் ஒரு தரவை வெளியிட்டது. அதன்படி உலகளவில் 1.73 லட்சம் கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் இருப்பு உள்ளது. ஒரு பீப்பாய் என்பது 160 லிட்டர்.

வெனிசுலா 30,300 கோடி பீப்பாய் இருப்புடன் முதலிடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 26,700 கோடி பீப்பாய்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஈரான் 20,800 கோடி பீப்பாய்களுடன் மூன்றாம் இடத்திலும், கனடா 16,300 கோடி பீப்பாய்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. இந்த நான்கு நாடுகளின் இருப்பு உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் பாதிக்கும் மேல். இந்த வரிசையில் அமெரிக்கா 5,500 கோடி பீப்பாய்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு கொட்டி கிடந்தாலும் அந்நாடு அதை ஏற்றுமதி செய்து ஈட்டும் வருவாய் ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. வெனிசுலாவுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணெய் இருப்பு உடைய சவுதி - 15 லட்சம் கோடி ரூபாய்; அமெரிக்கா - 11 லட்சம் கோடி ரூபாய்; ரஷ்யா - 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகள் காரணமாக வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் நவீனமடையாமல் உள்ளன. எனவே அவர்களால் அதை வைத்து வருவாய் ஈட்ட முடியவில்லை.

கச்சா எண்ணெயில் இலகு ரகம், கன ரகம் என இரு வகைகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கனமான கச்சா எண்ணெய்கள் தேவை. ஆனால் அமெரிக்காவில் கிடைப்பவை இலகு ரகம். அதற்கு நேர்மாறாக வெனிசுலாவில் கன ரக கச்சா எண்ணெய் வளம் ஏராளமாக உள்ளது.

நாடு வளமடையும்


வெனிசுலா அதிபரை கைது செய்த பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு கச்சா எண்ணெய் வளம் பற்றி விரிவாக பேசினார்.

“வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் தோல்வியடைந்த ஒன்று. நம்மிடம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ''அவற்றை வெனிசுலாவுக்கு அனுப்புவோம். அவர்கள் கட்டமைப்பை சரி செய்து ஏற்றுமதியை அதிகரிப்பர். இதன் மூலம் அந்நாடு வளமடையும்,” என்றார்.

இவை அனைத்தையும் குறிப்பிட்ட மதுரோவின் ஆதரவாளர்கள், 'அமெரிக்காவின் குறி போதைப்பொருள் கிடையாது; வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் வளம் தான்' என கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us