sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போர் பதற்றம் எதிரொலி: துபாய் விமான நிலையங்கள் மூடல்

/

போர் பதற்றம் எதிரொலி: துபாய் விமான நிலையங்கள் மூடல்

போர் பதற்றம் எதிரொலி: துபாய் விமான நிலையங்கள் மூடல்

போர் பதற்றம் எதிரொலி: துபாய் விமான நிலையங்கள் மூடல்


ADDED : பிப் 28, 2026 07:04 PM

Google News

ADDED : பிப் 28, 2026 07:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடவடிக்கையால், துபாய் சர்வதேச விமான நிலையம், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் ஆகிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் இன்று முதல்(பிப்ரவரி 28) காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஈரான் ஏவிய ஏவுகணைகள்,அமீரகத்தின் வான்வெளியில் இடைமறிக்கப்பட்டதால் துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது.எமிரேட்ஸ் மற்றும் பிளை துபாய் நிறுவனங்கள் தங்களது சேவைகளை முழுமையாக ரத்து செய்துள்ளன. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற இந்திய விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான், ஈராக், ஜோர்டான் மற்றும் குவைத் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு வான்வெளியை மூடியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இது தொடர்பாக துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

துபாயில் அனைத்து வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம்.

உங்கள் விமானத்தின் தற்போதைய நிலையை அறிய Emirates Travel Updates அல்லது flydubai Flight Status ஆகிய இணையதளங்களைச் சரிபார்க்கவும்.

டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெறவோ அல்லது தேதியை மாற்றவோ முயற்சி செய்யலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us