சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டை கையில் எடுத்தது நெதர்லாந்து அரசு
சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டை கையில் எடுத்தது நெதர்லாந்து அரசு
ADDED : அக் 13, 2025 09:48 PM

ஆம்ஸ்டர்டாம்: செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப அறிவுசார் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் சீன நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சிப் தயாரிக்கும் நிறுவனமான நெக்பெரியாவின் கட்டுப்பாட்டை நெதர்லாந்து அரசு எடுத்துக் கொண்டது.
சீனாவின் விங்டெக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் நெக்ஸ்பெரியா என்ற நிறுவனம் நெதர்லாந்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கார்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு பொருட்களுக்கான சிப்களை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனம் அந்நாட்டின் தொழில்நுட்பங்களை, தங்களது நாட்டுக்கு அனுப்பும் என்ற கவலை அங்கு எழுந்த நிலையில், நெக்ஸ்பெரியாவின் செயல்பாட்டில் நெதர்லாந்து அரசு தலையிட்டுள்ளது. இதன்காரணமாக ஷாங்காய் பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தன.
அதேநேரத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையை நெதர்லாந்து அரசு எடுத்துக்கொள்ளவில்லை. தங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை அந்நாட்டு அரசு நிறுத்தவோ அல்லது தடுக்கவோ முடியும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், தொழிற்சாலையில் உற்பத்தியில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.