தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அமெரிக்க இடைக்கால தேர்தலுக்காக முன்கூட்டியே ஓட்டளித்தார் டிரம்ப்

அமெரிக்க இடைக்கால தேர்தலுக்காக முன்கூட்டியே ஓட்டளித்தார் டிரம்ப்

அமெரிக்க இடைக்கால தேர்தலுக்காக முன்கூட்டியே ஓட்டளித்தார் டிரம்ப்


UPDATED : அக் 25, 2026 07:47 PM

ADDED : அக் 25, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 07:47 PM ADDED : அக் 25, 2026 07:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற உள்ள இடைக்கால தேர்தலுக்காக, முன்கூட்டிய ஓட்டளிக்கும் முறையின் அடிப்படையில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் அதிபரின் நான்கு ஆண்டுகால ஆட்சி காலத்துக்கு நடுவே அதாவது இரண்டாவது ஆண்டின் இறுதியில், இடைக்கால தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இது பார்லிமென்ட் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலாகும். இதன்படி, அமெரிக்க பார்லிமென்டில் உள்ள பிரதிநிதிகள் சபையின் அனைத்து, 435 உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதேபோன்று, செனட் சபையின் மொத்தமுள்ள 100 உறுப்பினர்களின் பதவிகாலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இதில் மூன்றில் ஒரு பங்கான, 33 இடங்களுக்கும் இடைக்கால தேர்தலின்போது ஓட்டெடுப்பு நடக்கும்.

இந்த இடைக்கால தேர்தல், வரும், நவ., 3ம் தேதி நடக்கிறது. இதற்காக, முன்கூட்டியே ஓட்டளிக்கும் முறையின் கீழ், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் நகரில் உள்ள ஓட்டு பதிவு மையத்தில் நேற்று ஓட்டளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளர் அனைவருக்கும் வாக்களித்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜார்ஜியாவில் நடக்க உள்ள தேர்தல் பிரசார பேரணிக்கு டிரம்ப் புறப்பட்டு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us