தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ மீண்டும் நிலநடுக்கம்

 மீண்டும் நிலநடுக்கம்

 மீண்டும் நிலநடுக்கம்


ADDED : மார் 08, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிகரித்து வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியான, ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு மேற்கே, 74 கி.மீ., தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், 4.1 ரிக்டர் அளவுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை 3:17 மணிக்கு பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமா ன ஹார்முஸ் ஜலசந்தியின் அருகேயும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியா கவி ல்லை.

வார தொடக்கத்தில், பார்ஸ் மாகாணத்தின் ஜெராஷ்வில் 4.3 ரிக்டர் அளவிலான அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் நில அதிர்வு ஏற்பட் டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us