ADDED : அக் 28, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்காரா:துருக்கியில் 6.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.: மேற்காசிய நாடான துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தின் சிந்திர்கி நகரை மையமாகக் கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 6 கி.மீ., ஆழத்தில் இது நிகழ்ந்தது.
நிலநடுக்கத்தில் சிந்திர்கியில் காலியாக இருந்த மூன்று கட்டடங்களும், இரண்டு மாடி கொண்ட ஒரு கடையும் இடிந்து விழுந்ததாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகயா கூறினார்.
பீதியில் கீழே விழுந்து 22 பேர் காயமடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதமும் சிந்திர்கியில் 6.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

