ADDED : அக் 03, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்தான்புல்:மேற்காசிய நாடான துருக்கியின் தலைநகரும், அந்நாட்டின் மிகப்பெரிய நகருமான இஸ்தான்புல்லில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தால் கட்டங்கள் குலுங்கியதையத்து, மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இஸ்தான்புல்லின் தென்மேற்கில் உள்ள மர்மாரா கடல் பகுதி யில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு முன், குட்டாஹ்யா மாகாணம் சிமாவ் நகரில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.