ஜப்பான் குலுங்க வைத்தது நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை 'வாபஸ்'
ஜப்பான் குலுங்க வைத்தது நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை 'வாபஸ்'
ADDED : டிச 13, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ:: ஜப்பானில் சமீபத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில்: கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹொன்ஷு மாகாணத்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று காலையில், 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பல கட்டடங்கள் குலுங்கின. அதைத் தொடர்ந்து, பசிபிக் கடலோர பகுதிகளில், மூன்றரை அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழக்கூடும் என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது; சில மணி நேரங்களில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இதே பகுதியில், கடந்த, 8ம் தேதி, 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 50 பேர் வரை காயமடைந்தனர்.
கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, ஜப்பான் வானிலை மையம் எச்சரித்திருந்தது.

