ADDED : ஜூன் 22, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான் : மேற்காசிய நாடான ஈரானில் செம்னான் பகுதியில், நேற்று முன்தினம், 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சமீபத்தில், 2.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதால்தான், ஒரு வாரத்துக்குள் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் சாதாரணமாக அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும். ஆண்டுக்கு, 2,100 நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், அதில் 15 முதல் 16 நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவில், 5 அல்லது அதற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.