தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/எபோலா நோய்த்தொற்று பரவல்; அவசரகால நிதியிலிருந்து ரூ.574 கோடி ஐநா ஒதுக்கீடு

எபோலா நோய்த்தொற்று பரவல்; அவசரகால நிதியிலிருந்து ரூ.574 கோடி ஐநா ஒதுக்கீடு

எபோலா நோய்த்தொற்று பரவல்; அவசரகால நிதியிலிருந்து ரூ.574 கோடி ஐநா ஒதுக்கீடு


ADDED : மே 23, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

காங்கோவில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசரகால நிவாரண நிதியிலிருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.574 கோடி) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆப்ரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து பரவும் இந்த வைரஸ், மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. இதை கண்டறிந்து, முறையான சிகிச்சை அளிக்க தவறினால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. சளி, இருமல், காய்ச்சலுடன் வரும் பயணியரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில்எபோலா நோய்த்தொற்றுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசரகால நிவாரண நிதியிலிருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.574 கோடி ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us