நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்; எலான் மஸ்க் உருக்கம்
நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்; எலான் மஸ்க் உருக்கம்
ADDED : மார் 11, 2025 06:43 AM

வாஷிங்டன்: 'நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்' என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தி வரும் ஊடகம் எக்ஸ் தளம். உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வரும் எக்ஸ் தளம் நேற்று (மார்ச் 10) திடீரென முடங்கியது. பிற்பகல் 3.30 மணி முதல் 3.45 மணி வரை சிக்கல்களை எதிர்கொண்டதாக பயணிகள் தெரிவித்தனர். 15 நிமிடங்கள் கழித்து பிரச்னை சரியாகி எக்ஸ் தளம் செயல்பாட்டுக்கு வந்தது.
இது தொடர்பாக, எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கை: எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இன்னும் தாக்குதல் நடந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்.
நிறைய ஆள் பலத்தை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பெரிய குழு அல்லது ஒரு நாடு சம்பந்தப்பட்டிருக்கலாம். சைபர் தாக்குதல் குறித்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.