sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா; பிரபல பெண் எழுத்தாளர் பகீர்

/

எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா; பிரபல பெண் எழுத்தாளர் பகீர்

எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா; பிரபல பெண் எழுத்தாளர் பகீர்

எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா; பிரபல பெண் எழுத்தாளர் பகீர்

16


UPDATED : பிப் 15, 2025 12:48 PM

ADDED : பிப் 15, 2025 12:35 PM

Google News

UPDATED : பிப் 15, 2025 12:48 PM ADDED : பிப் 15, 2025 12:35 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ததனக்கு பிறந்துள்ள குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என்று பிரபல பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் கூறியுள்ளார்; ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு 3 முறை திருமணம் ஆகி, 11 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் முக்கிய பாங்காற்றி வருகிறார். தொழிலதிபராக திகழ்ந்து வரும் மஸ்க், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

எலான் மஸ்க்கிற்கு மூன்று திருமணங்கள் நடந்தது. 11 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்க்கு 3 குழந்தைகளும் உள்ளனர். முதல் 2 மனைவிகளை விட்டு பிரிந்து, 3வது மனைவியுடன் ஷிவோனுடன் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், '5 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை. குழந்தையின் பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன்.

எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் கூறி வந்த நிலையில், எலான் மஸ்க் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்தப் பதிவை போட்ட பிறகு சுமார் 3 மணிநேரம் கழித்து ஆஷ்லே செயின்ட் கிளேர், 'தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால், தற்போது எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுகிறேன்,' எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us