sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

/

ஈரான் எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஈரான் எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஈரான் எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

2


UPDATED : மார் 09, 2026 06:54 PM

ADDED : மார் 09, 2026 06:22 PM

Google News

2

UPDATED : மார் 09, 2026 06:54 PM ADDED : மார் 09, 2026 06:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரானில் உள்ள இந்தியர்கள் யாரும், மூன்றாவது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் 2வது வாரத்தை கடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இருந்து பெரும்பாலான இந்தியர்கள் வெளியேறி விட்ட நிலையில், இன்னும் சிலர் அங்கேயே தங்கி வருகின்றனர். அவர்கள் இந்தியத் தூதரகத்தின் உதவியை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இன்று டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவரை ஒன்றை வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக தூதரகத்தின் உதவி இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தூதரகத்திடம் இருந்து வெளிப்படையாக அறிவுரைகளை பெற்ற பின்னரே, எல்லைப்பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும்.

தனிநபர்கள் யாரும், ஈரானை விட்டு வெளியேறி, குறிப்பிட்ட 3வது நாட்டிற்கள் நுழைய முடியாமல் போனால், அவர்களுக்கு தூதரகம் உதவி செய்யும் நிலையில் இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். இந்தியர்களுக்கு உதவ தூதரகத்தை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

மொபைல் எண்: +98 912 810 9115, +98 912 810 9102, +98 912 810 9109, +98 9932179359

இமெயில்: cons.tehran@mea.gov.in

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us