sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்

/

துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்

துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்

துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்

1


UPDATED : மார் 04, 2026 09:51 PM

ADDED : மார் 04, 2026 06:55 PM

Google News

1

UPDATED : மார் 04, 2026 09:51 PM ADDED : மார் 04, 2026 06:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாயில் இருந்து உலகின் பல நகரங்களுக்கு 45 விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் இன்று இயக்க உள்ளதாக ' மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் 5வது நாளை எட்டியுள்ளது. இதனால் வான்வெளி மூடப்பட்டு உள்ளதால் வளைகுடா நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சில விமான சேவைகள் துபாயில் இருந்து துவங்கும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: வான்வெளி மூடல் காரணமாக துபாயில் இருந்து செல்லும் மற்றும் துபாய் வரும் விமானங்கள் 4ம் தேதி நள்ளிவு 11:59 மணி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இங்குள்ள பயணிகளை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க குறைந்தளவு விமானங்களை இயக்குகிறோம். இந்த சிறப்பு விமானங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எங்களிடம் இருந்து தகவல் வரவில்லை என்றாலும், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கையில் இல்லை என்றாலும் யாரும் விமான நிலையம் செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

துபாய் நேரப்படி காலை 6:30 மணிக்கு அங்கிருந்து கீழ்க்கண்ட நகரங்களுக்கு விமான சேவை நடைபெற உள்ளது.இதன்படி

சென்னை

மும்பை( 3 விமானங்கள்)

டில்லி( 2 விமானங்கள்)

பெங்களூரு( 2 விமானங்கள்)

ஐதராபாத்

பாரிஸ்( பிரான்ஸ்)

லண்டன் ஹித்ரு ( 2 விமானங்கள்)

மாஸ்கோ(ரஷ்யா)

கேப்டவுன்( தென் ஆப்ரிக்கா)

பர்மிங்ஹம்( பிரிட்டன்)

சாவ்பாலோ( பிரேசில்)

டா நாங் (வியட்நாம்)

பிராங்பர்ட்(ஜெர்மனி)

ஜெட்டா(சவுதி- 2விமானங்கள்)

கெய்ரோ (கெய்ரா)

மொரிஷியஸ்

ஹாங்காங்(சீனா)

குவாங்சு(சீனா)

கொழும்பு(இலங்கை)

ஜோக்கன்னஸ்பெர்க்( தென் ஆப்ரிக்கா)

லிஸ்பன்(போர்ச்சுகல்)

எடின்பர்க்(ஸ்காட்லாந்து)

முனிச்( ஜெர்மனி)

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்(ரஷ்யா)

மாஸ்கோ(மாஸ்கோ)

லண்டன் காட்விக்(பிரிட்டன்)

மணிலா(பிலிப்பைன்ஸ்)

சிங்கப்பூர்

சிட்னி(ஆஸ்திரேலியா)

மிலன்(இத்தாலி)

மாலே(மாலத்தீவு)

ஹனோய்( வியட்நாம்)

தைபே(தைவான்)

ஆம்ஸ்டர்டம்(நெதர்லாந்து)

லண்டன் எல்எச்ஆர்

மான்செஸ்டர்(பிரிட்டன்)

டசல்டோர்ப் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us