ADDED : பிப் 04, 2024 03:44 AM

வாஷிங்டன்: செவ்வாய் கோளில் மூன்று ஆண்டாக ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவின் 'இன்ஜனியுடி' ெஹலிகாப்டர் பணி முடிவுக்கு வந்தது.
சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து உள்ள கோள் 'செவ்வாய்'. இது 'சிவப்பு கோள்' என அழைக்கப்படுகிறது. இதில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா என ஆராய, நாசா விண்வெளி மையம் 2020 ஜூலை 30ல் 'பெர்சிவிரன்ஸ்' ரோவரை அனுப்பியது. இது செவ்வாய் பற்றி பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பியது.
இதில்1.8 கிலோ எடையுள்ள சிறிய ரக 'இன்ஜினியுடி' ஹெலிகாப்டரும் அனுப்பபட்டது. இது 2021 பிப். 18ல் செவ்வாயில் தரையிறங்கியது. ஏப். 19ல் செவ்வாய் தரைப்பரப்பில் முதன்முறையாக பறந்தது. பூமியை தவிர வேற்று கோளில் ஹெலிகாப்டர் பறந்தது இதுவே முதல்முறை. துவக்கத்தில் 5 முறை பறந்தாலே போதும் என விஞ்ஞானிகள் நினைத்தனர். ஆனால் இதுவரை 72 முறை பறந்து சாதித்தது. அதிகபட்சமாக 40 அடி உயரம் பறந்தது. இதன் மொத்த நேரம் 2 மணி. 2024 ஜன. 18ல் இதன் இறக்கை சேதமடைந்ததால் இதன்பணி நிறைவு பெற்றது.