sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

/

முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

8


ADDED : ஆக 28, 2025 08:09 AM

Google News

8

ADDED : ஆக 28, 2025 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெனீவா: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்தன. இந்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டதால், அந்நாட்டின் மீதான ஐ.நா.,வின் பல தடைகள் நீக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், 2018ல் வெளியேறினார். இதையடுத்து ஈரான், யுரேனியத்தை அணு ஆயுத தரத்திற்கு செறிவூட்டும் பணியில் இறங்கியது. இது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறி, ஈரான் மீது கடந்த ஜூனில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் 12 நாட்கள் நீடித்தது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது குண்டுகளை வீசியது. அணுசக்தி வளாகங்கள் சேதமடைந்ததாக கூறி, சண்டையை நிறுத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலை நிறுத்திக் கொண்டன.

தற்போது ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகியவை, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று பேச்சு நடத்தின.

அதில், ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகாரிகளை தங்கள் நாட்டின் அணுசக்தி வளாகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும், 60 சதவீத தரத்தில் செறிவூட்டி வைத்துள்ள 400 கிலோ யுரேனியத்தை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும், அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், அது எதையும் ஈரான் ஏற்கவில்லை. இதனால் பேச்சு இழுபறியில் முடிந்தது. இதனால், மூன்று ஐரோப்பிய நாடுகளும் 2015க்கு முன், ஐ.நா., விதித்த பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்தும் பணிகளை துவக்குவோம் என எச்சரித்துள்ளன.

ஈரானுடனான சர்வதேச நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்தில் 'ஸ்னாப்பேக்' செயல்முறை என்ற ஒன்று உள்ளது. இதன்படி ஈரான் ஒப்பந்தத்தை மீறியதாக, அதை உருவாக்கிய ஐந்து நாடுகளில் ஏதேனும் ஒன்று கருதினால், இந்த செயல்முறையை கொண்டு வரலாம்.

இது ஐ.நா.,வின் 2015க்கு முந்தைய பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அனுமதிக்கும். ஆனால், இந்த தீர்மானம், வரும் அக்டோபர் 18ல் காலாவதி ஆகிறது. அதற்குள் ஈரானை வழிக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் தருகின்றன.






      Dinamalar
      Follow us