ஆப்கானிஸ்தான் அகதிகள் பாக்.,-கிலிருந்து வெளியேற்றம்
ஆப்கானிஸ்தான் அகதிகள் பாக்.,-கிலிருந்து வெளியேற்றம்
ADDED : நவ 02, 2025 12:41 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை விட்டு, 40,000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்த பின், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இதையடுத்து, அகதிகளின் எண்ணிக்கை அதிகமானதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பொது சேவைகளில் அழுத்தம் கொடுப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
கடந்த, 2023 முதல், ஆப்கானிஸ்தான் சட்டவிரோத குடியேறிகள் உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்தப்படுவர் என்றும் எச்சரித்தது. நாடு முழுதும், 54 ஆப்கன் அகதி முகாம்களை மூட உத்தரவிட்டதன் மூலம் நாடு கடத்தல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடுமையாக்கியது.
இந்நிலையில், பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் இருந்து, 40,000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

