முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு
முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு
UPDATED : ஆக 17, 2024 02:55 AM
ADDED : ஆக 17, 2024 02:52 AM

வாஷிங்டன்: உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என எக்ஸ் வலைதள உரிமையாளரும், பெரும் பணக்காரருமான எலான் மஸ்கிற்கு அயர்லாந்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ரூனி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திடீரென இமெயில் வாயிலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக ரூனிக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ரூனி அயர்லாந்தில் உள்ள பணியிட தொடர்பு கமிஷன் எனப்படும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்கின் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்திற்கு ( 602,640 அமெரிக்க டாலர்) ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

