இந்தியா மீது வர்த்தக தாக்குதல்: டிரம்பை விளாசிய அமெரிக்க மாஜி பாதுகாப்பு ஆலோசகர்
இந்தியா மீது வர்த்தக தாக்குதல்: டிரம்பை விளாசிய அமெரிக்க மாஜி பாதுகாப்பு ஆலோசகர்
ADDED : ஆக 30, 2025 08:40 AM

வாஷிங்டன்; இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை ஒரு வர்த்தக தாக்குதல் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் ஜேக் சல்லிவன் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அமல் செய்துள்ளார்.
இது பற்றி அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது;
டிரம்பின் இந்த நடவடிக்கை ஒரு வர்த்தக தாக்குதல். பீஜிங்கிற்கு நெருக்கமாக இந்தியாவை கொண்டும் செல்லும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட, வரி விதிப்பை ஒரு சீர்குலைவாக பார்க்கின்றன.
நாங்கள் ஆழமான, ஒரு நெருக்கமான மற்றும் நிலையான உறவை உருவாக்க இந்தியாவுடன் முயற்சிக்கிறோம். ஆனால் வரி விதிப்பால் இந்தியா இப்போது சீனாவுடன் நெருக்கமான ஈடுபாட்டை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இவ்வாறு ஜேக் சல்லிவன் கூறி உள்ளார்.