தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து; தொழிலாளர்கள் 32 பேர் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து; தொழிலாளர்கள் 32 பேர் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து; தொழிலாளர்கள் 32 பேர் பலி


UPDATED : ஜூலை 31, 2026 08:38 AM

ADDED : ஜூலை 31, 2026 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2026 08:38 AM ADDED : ஜூலை 31, 2026 08:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், மீத்தேன் வாயு கசிவினால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரையில் 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், மீட்புக் குழுவினர் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். உயிருடன் யாரையும் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சுரங்க வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us