sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வழிக்கு வந்தது பேஸ்புக்; அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் நிவாரணம் தர மெட்டா முடிவு

/

வழிக்கு வந்தது பேஸ்புக்; அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் நிவாரணம் தர மெட்டா முடிவு

வழிக்கு வந்தது பேஸ்புக்; அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் நிவாரணம் தர மெட்டா முடிவு

வழிக்கு வந்தது பேஸ்புக்; அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் நிவாரணம் தர மெட்டா முடிவு

1


ADDED : ஜன 30, 2025 12:57 PM

Google News

ADDED : ஜன 30, 2025 12:57 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டொனால்டு டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

மேலும், தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபரான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வக்கீல், கலிபோர்னியா கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 'இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்,' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பாக எந்த விபரமும் குறிப்பிடவில்லை

பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிரம்ப்புக்கு இது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us