தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்கா நடுவானில் சாகச நிகழ்ச்சி போர் விமானங்கள் மோதல்

 அமெரிக்கா நடுவானில் சாகச நிகழ்ச்சி போர் விமானங்கள் மோதல்

 அமெரிக்கா நடுவானில் சாகச நிகழ்ச்சி போர் விமானங்கள் மோதல்


ADDED : மே 19, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்காவில் விமான சாகச கண்காட்சியின்போது நடுவானில் இரண்டு போர் விமானங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்த நான்கு விமானிகள் சமயோஜிதமாக தப்பித்தனர்.

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மவுன்டன் ஹோம் விமானப்படை தளத்தில், 'கன்பைட்டர் ஸ்கைஸ்' என்ற பெயரில் பிரமாண்ட வான்வழி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன போர் விமானங்கள் நடுவானில் மிக நெருக்கமாக பறந்து சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களும் திடீரென பயங்கரமாக மோதிக்கொண்டு கீழே விழுந்து நொறுங்கின.

விமானங்கள் கீழே விழுவதற்கு சில வினாடிகள் முன், அதில் இருந்த நான்கு விமானிகளும் சமயோஜிதமாக செயல்பட்டு, பாராசூட்டுகள் மூலம் விமானத்தில் இருந்து குதித்து தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us