இலங்கையை சூழ்ந்த வெள்ளம்; 4 லட்சம் பேர் பாதிப்பு; 14 பேர் பலி!
இலங்கையை சூழ்ந்த வெள்ளம்; 4 லட்சம் பேர் பாதிப்பு; 14 பேர் பலி!
ADDED : நவ 30, 2024 12:10 PM

கொழும்பு: இலங்கையில் கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.பெஞ்சல் புயலானது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று(நவ.30) மாலை அல்லது நாளை (டிச.1) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போல் இலங்கையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் 4,41,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 38,594 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கண்டி, நுவரெலியா, கேகாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கொழும்பு, கண்டி, குருநாகல், மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.