தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஊழல் வழக்கில் மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் கைது

ஊழல் வழக்கில் மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் கைது

ஊழல் வழக்கில் மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் கைது


ADDED : பிப் 17, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போர்ட்லூயிஸ்: ஊழல் வழக்கில் மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய ரெய்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடாக மொரிசியஸ் நாட்டின் பிரதமராக 2017 முதல் 2024 வரை பதவி வகித்து வந்தவர் பிரவிந்த் ஜக்நாத் ,62 கடந்த ஆண்டு நடந்து முடிந்த பொது தேர்தலில் இவரது தலைமையிலான கட்சி படுதோல்வி அடைந்தது.

முன்னதாக அவர் முன்னர் பதவியில் இருந்தே போது பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்தார் அப்போது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாகவும்,ஊழல் செய்யததாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவரது வீடு , அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் கட்டு கட்டமாக பணம் சிக்கியது. இதன் மதிப்பு (2.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பிரவீந்த்குமார் ஜூக்நாத், அவரது மனைவி கோபிதா ஜூக்நாத், மற்றும் சிலர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து ,பிரவீந்த் குமார் ஜூக்நாத்தை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us