மோடியை சந்தித்த இலங்கை மாஜி கிரிக்கெட் ஜாம்பவான்கள்
மோடியை சந்தித்த இலங்கை மாஜி கிரிக்கெட் ஜாம்பவான்கள்
ADDED : ஏப் 05, 2025 08:52 PM

கொழும்பு: இலங்கை மாஜி கிரிக்கெட் ஜாம்பவான்கள் இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினர்.
தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 04) இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுர திசநாயகேவை சந்தித்தார்.
இதையடுத்து கடந்த 1996 உலக கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பெற்ற இலங்கை அணியில் இடம் பெற்ற மாஜி கிரிக்கெட் ஜாம்பவான்களான அரவிந்த் சில்வா, மார்வான் அட்டபட்டு, சமிந்தா வாஸ், ஜெயசூர்யா, உள்ளிட்ட வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்தியாவை ஆளும் மோடியின் தலைமையை வெகுவாக பாராட்டினர். இதன் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்தார்.