ADDED : ஆக 27, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு:நமது அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபரும், 6 முறை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே, தன் பதவி காலத்தில் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலை காரணம் காட்டி, அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணை வருகிற அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.