நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி ஆட்சியை இழந்தார்; பிரான்ஸ் பிரதமர் பேய்ரூ
நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி ஆட்சியை இழந்தார்; பிரான்ஸ் பிரதமர் பேய்ரூ
ADDED : செப் 09, 2025 06:58 AM

பாரிஸ் : பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தார்.
இது, அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் பிரதமராக உள்ள பிரான்சுவா பேய்ரூ சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட், பல தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்தது.
இதனால், பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் முடக்கமானது. இந்நிலையில், தன் பட்ஜெட் திட்டத்தை நிறைவேற்ற, பார்லிமென்டின் ஆதரவை பெற நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ அழைப்பு விடுத்தார்.
நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரான்சுவாவுக்கு எதிராக ௧௯௪ ஓட்டுகள் பதிவாகின. இதையடுத்து, அவரது அரசு கவிழ்ந்தது.
பிரான்சுவா பேய்ரூ நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தையடுத்து, மீண்டும் தேர்தலை சந்திப்பதை தவிர்க்க, அதிபர் மேக்ரான் புதிய பிரதமரை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அது எதிர்க்கட்சியைச் சார்ந்தவராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிபர் மேக்ரானின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பதவி நீக்கப்படும் ஐந்தாவது பிரதமராகவும், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பதவி நீக்கப்படும் இரண்டாவது பிரதமராகவும் பிரான்சுவா பேய்ரூ இருப்பார்.