சதாம் உசேன் முதல் ஷேக் ஹசீனா வரை... நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள்
சதாம் உசேன் முதல் ஷேக் ஹசீனா வரை... நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள்
ADDED : நவ 17, 2025 05:37 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட தலைவர்கள் பட்டியலில், முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதால், அவருக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை.
இதேபோன்று குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் நீதிமன்றங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் தற்போது ஷேக் ஹசீனாவும் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சிலர் துாக்கில் இடப்பட்டனர்; சிலர் தப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1979ம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அதிபருமான ஷூல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
1989ம் ஆண்டு ரோமானியா நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலே சீஸஸ்கோ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தென்கொரியா நாட்டின் அதிபர் சுன் தூவானுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு தண்டனை குறைக்கப்பட்ட அவர் விடுவிக்கப்பட்டார்.
ஈரான் -அதிபர் அமீர் அபாஸ் ஹவ்தியாவுக்கு 1979ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், 2006ல் தூக்கிடப்பட்டார்.
மாலி நாட்டின் முன்னாள் மவுசா டராரேவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2002ல் தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
கிரீஸ் -நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜியோஸ் பபாடோப்ளோஸூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். அதன்பிறகு, தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
காங்கோ குடியரசு நாட்டின் முன்னாள் அதிபர் - ஜோசப் கபிலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது வரை அவர் தலைமறைவாக உள்ளார்.

