தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சைபர் தாக்குதலில் சிக்கியது ஜெர்மனி தொழில்நுட்ப நிறுவனம்

சைபர் தாக்குதலில் சிக்கியது ஜெர்மனி தொழில்நுட்ப நிறுவனம்

சைபர் தாக்குதலில் சிக்கியது ஜெர்மனி தொழில்நுட்ப நிறுவனம்


UPDATED : நவ 27, 2026 08:26 PM

ADDED : நவ 27, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 08:26 PM ADDED : நவ 27, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எஸ்.ஏ.பி., சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

சமீப மாதங்களாக உலகளாவிய சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாதத்தில் மட்டும், பிபா, சி.ஐ.ஏ., ஆகியவற்றின் தளங்கள் ஹேக் செய்யப்பட்டன. இந்தியாவின் ஸ்டேட் வங்கி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஹேக்கர்கள் இத்தகைய தாக்குதல்களை நடத்துவது அதிகரித்து வருவதாக கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. குறிப்பாக சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இதை பயன்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க தொழில்நுட்ப நிறுவனமான எஸ்.ஏ.பி., மீது இந்த வார தொடக்கத்தில் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

‘கிட்ஹப்’ தளத்தில் உள்ள எஸ்.ஏ.பி., ஊழியர்களின் கடவு சொல்லை திருடி, அதன் மூலம் அந்நிறுவனத்தின் மென்பொருள் சோர்ஸ் கோடு எனப்படும் மூலக்குறியீட்டை ஹேக்கர்கள் அணுகியிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, சைபர் தாக்குதல் நடந்ததை எஸ்.ஏ.பி., நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது. மேலும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாடிக்கையாளர்களின் வர்த்தக தரவுகளை யாரும் சட்டவிரோதமாக அணுகியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்வதற்காக, உலகளவில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எஸ்.ஏ.பி., திட்டமிட்டுள்ள நிலையில், இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us