நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் தோல்வி; முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் தோல்வி; முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு
ADDED : டிச 17, 2024 08:01 AM

பெர்லின்: நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால் ஆளுங்கட்சி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார்.
733 இடங்களைக் கொண்ட கீழ்சபையில் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 207 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வி அடைந்தார். அதேநேரத்தில், 394 உறுப்பினர்கள் எதிராக ஓட்டளித்தனர். 116 பேர் ஓட்டளிப்பை புறக்கணித்தனர். இதனால் அவர் வெற்றி பெற தேவையான 367 பெரும்பான்மையை விட மிகக் குறைவாகவே பெற்று இருந்தார். இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் தோல்வியை தழுவினார். பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.