தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மருத்துவ விடுப்பு விதிகளை கடுமையாக்குகிறது ஜெர்மனி

மருத்துவ விடுப்பு விதிகளை கடுமையாக்குகிறது ஜெர்மனி

மருத்துவ விடுப்பு விதிகளை கடுமையாக்குகிறது ஜெர்மனி


ADDED : ஜூலை 02, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 07:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெர்லின்: ஜெர்மனியில் தொழிலாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கான விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பாவில் முக்கியமான பொருளாதார நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி திகழ்கிறது. சமீபகாலமாக பலவீனம் அடைந்து வரும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அதில், பென்சனில் மாற்றம், நிர்வாக அமைப்பு குறைப்பு மற்றும் மருத்துவ விடுப்புக்கான விதிகளில் மாற்றம் ஆகியன அடங்கும். இதன் மூலம் உற்பத்தியை அததிகரிப்பதுடன், நீண்ட காலமாக நிலவும் பொருளாதார சவால்களை சமாளிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் பலவீனமாக உள்ள நிலையில் ஊழியர்கள் அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுப்பதால், உற்பத்தி பாதிக்கப்படுவதாக அரசு கூறி வருகிறது.தற்போதை விதிகளின்படி 3 நாட்கள் டாக்டர்களின் அறிக்கை இல்லாமல் ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும். சில ஊழியர்கள், டாக்டர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டு ஒரு வாரம் விடுப்பு எடுத்து வருகின்றனர். இதனால் விதிகளில் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us