பிரதமர் மோடி அற்புதமான தலைவர்; சிறந்த நண்பர்: ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் பதில்
பிரதமர் மோடி அற்புதமான தலைவர்; சிறந்த நண்பர்: ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் பதில்
ADDED : ஜன 22, 2026 08:41 AM

புதுடில்லி: பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; நமக்கு நல்ல ஒப்பந்தம் அமையும். மோடி அற்புதமான தலைவர்; சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று, அதிபர் டிரம்ப் பேசினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்:
உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், என்னுடைய நண்பர். நமக்கு நல்ல ஒப்பந்தம் அமையும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
அண்மையில், அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்டு லுட்னிக், ''இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் தயாராகி விட்டது. அது இறுதியாக வேண்டுமெனில், பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் போனில் பேச வேண்டும். இந்திய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் பேச மறுத்து விட்டார்.
இதனால், இந்தியாவை விட வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பின் தங்கியிருந்த வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள், முன் சென்று ஒப்பந்தம் ஏற்படுத்தி விட்டன'' என கூறியிருந்தார். இந்த சூழலில், இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

