தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ தலாய் லாமாவுக்கு 'கிராமி' விருது

 தலாய் லாமாவுக்கு 'கிராமி' விருது

 தலாய் லாமாவுக்கு 'கிராமி' விருது


ADDED : பிப் 03, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாஸ் ஏஞ்சலஸ்: திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு, 'கிராமி' விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இசையில் சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில், அமெரிக்காவில், கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. 'மெடிடேசன்ஸ்: தி ரிப்ௌக்சன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினெஸ் தி தலாய் லாமா' என்ற ஆன்மிக சொற்பொழிவுக்காக, 'சிறந்த ஒலி வடிவ கதைச் சொல்லும் படைப்பு' பிரிவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இது, தலாய் லாமா பெறும் முதல் கிராமி விருது. அவரது சார்பாக, இசைக் கலைஞர் ரூபஸ் வைன்ரைட் விருதை பெற்றுக் கொண்டார்.

விருது குறித்து கருத்து தெரிவித்த தலாய் லாமா, ''இதை ஒரு தனிப்பட்ட சாதனையாக பார்க்கவில்லை. அமைதி, கருணை, மனிதநேயத்தின் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். இந்த விருது உலகளாவிய பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்ட உதவும்,'' என்றார்.

இதற்கிடையே, தலாய் லாமாவுக்கு விருது வழங்கியதற்கு நம் அண்டை நாடான சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.

இந்திய கலைஞர்களில் ஒருவருக்கு கூட கிராமி விருது கிடைக்கவில்லை. பாடகர்கள் அனுஷ்கா சங்கர், சித்தாந்த் பாட்டியா ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், ஒரு விருது கூட கிடைக்கவில்லை.

இது தவிர, புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தன் முதல் கிராமி விருதை வென்றதன் மூலம், 'எமி, கிராமி, ஆஸ்கர், டோனி' ஆகிய நான்கு உயரிய விருதுகளையும் வென்ற சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.

'ரெக்கார்டு ஆப் தி இயர்' என்ற விருதை வென்றதன் மூலம், 27 கிராமி விருதுகளுடன், அதிக கிராமிகளை வென்ற ராப் கலைஞர் என்ற பெருமையை கென்ட்ரிக் லாமர் பெற்றார்.

வரலாற்றிலேயே முதன்முறையாக ஸ்பானிஷ் மொழி ஆல்பத்திற்காக, ஆண்டின் சிறந்த ஆல்பம் விருதை ராப் பாடகர் பேட் பன்னி வென்றார்.

சர்ச்சை!

கிராமி விருது விழாவில், சிவப்பு கம்பள வரவேற்பில், அமெரிக்க பாடகி சாப்பல் ரோன் அணிந்து வந்த உடை சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. தன் தனித்துவமான, 'பேஷன்' பாணிக்காக அறியப்படும் அவர், இந்த முறை மேலாடையற்ற, மிக மெல்லிய கவுண் அணிந்து வந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us