sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல': அமெரிக்காவுக்கு எதிராக பேரணி

/

'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல': அமெரிக்காவுக்கு எதிராக பேரணி

'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல': அமெரிக்காவுக்கு எதிராக பேரணி

'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல': அமெரிக்காவுக்கு எதிராக பேரணி

5


UPDATED : ஜன 19, 2026 07:06 AM

ADDED : ஜன 19, 2026 04:35 AM

Google News

UPDATED : ஜன 19, 2026 07:06 AM ADDED : ஜன 19, 2026 04:35 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுாக்: 'கிரீன்லாந்து விற்பனைக்கல்ல' என்ற முழக்கத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர்.

ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியான இது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது. பாதுகாப்பு காரணங்களை கூறி, ஏதேனும் ஒரு வழியில் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்தீவு நாட்டில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஒருங்கிணைந்த போராட்டத்தை அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் பனி பொழிவையும், குளிரையும் பொருட்படுத்தாது, பனி நிரம்பிய வீதிகளில் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, தேசிய கொடிகளை ஏந்தி, 'கிரீன்லாந்து விற்பனைக்கல்ல' என்ற பதாகைகள் உடன் பேரணியாகச் சென்றனர்.

தலைநகர் நுாக்கின் மையப் பகுதியில் துவங்கிய இப்பேரணி, அங்குள்ள அமெரிக்க துாதரகத்தை நோக்கி சென்றது. நுாக்கின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் இப்பேரணியில் பங்கேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தீவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டமாக இது கருதப்படுகிறது. கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் இப்பேரணியில் மக்களுடன் இணைந்து பங்கேற்றார்.

இப்போராட்டங்கள் கிரீன்லா ந்தில் மட்டுமின்றி, டென்மார்க்கின் முக்கிய நகரங்களிலும் நடந்தது. டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் ஆ தரவை தெரிவித்தனர்.

தலைநகரில் உள்ள 'சிட்டி ஹால் ஸ்கொயர்' பகுதியில் திரண்ட மக்கள், அமெரிக்க துாதரகத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். டென்மார்க் கின் முக்கிய நகரங்களான ஆர்கஸ், ஆல்போர்க், ஓடென்ஸ் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன .

கனடாவின் வடக்கு பகுதியில் உள்ள நுனாவுட் மாகாணத்தின் தலைநகரான இகாலுயிட் நகரிலும், கிரீன்லாந்துக்கு ஆதரவாக பேரணி கள் நடத் தப்பட்டன.

புதிய வரி விதிப்பு!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் கிரீன்லாந்துக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பியதற்காக, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட எட்டு நாடுகளுக்கு, 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரும், பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.



ஒப்பந்தம் நிறுத்தம்

கூடுதல் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைத்துள்ளது. மிரட்டலுக்கு ஐரோப்பிய யூனியன் ஒருபோதும் பணியாது என்றும், நட்பு நாடுகள் மீதான புதிய வரி விதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.








      Dinamalar
      Follow us