அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை: எச்சரித்த கிரீன்லாந்து பிரதமர்
அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை: எச்சரித்த கிரீன்லாந்து பிரதமர்
ADDED : ஜன 21, 2025 10:28 PM

கோபன்ஹேகன்: 'நாங்கள் கிரீன்லாந்துவாசிகள். நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை. எங்களின் எதிர்காலத்தை கிரீன்லாந்து தீர்மானிக்கும்,' என்று அந்நாட்டு பிரதமர் மியூட் எகெட் கூறினார்.
டிரம்ப் பதவியேற்பு உரையில் கிரீன்லாந்தை குறிப்பிடவில்லை என்றாலும்,ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,கிரீன்லாந்து ஒரு அற்புதமான இடம், சர்வதேச பாதுகாப்புக்கு நமக்கு அது தேவை.டென்மார்க் நிச்சயம் வரும், அதைப் பராமரிக்கவும், அதை வைத்திருக்கவும் அவர்களுக்கு நிறைய பணம் செலவாகிறது என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் கூறியதாவது: கிரீன்லாந்து ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. எங்களின் சொந்த எதிர்காலத்தை நாங்களே தீர்மானிக்க விரும்புகிறோம். அமெரிக்கராக மாற விரும்பவில்லை.இவ்வாறு மியூட் எகெட் கூறினார்.

