sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்

/

அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்

அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்

அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்

8


ADDED : மார் 07, 2026 07:57 PM

Google News

8

ADDED : மார் 07, 2026 07:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரான் போர், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், அமெரிக்கா உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்துகிறது. இதனால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் பாதுகாப்பு வரவு செலவு திட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடனான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய துவங்கியுள்ளன. இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'பைனான்சியல் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், இந்த நான்கு நாடுகளும் அமெரிக்கா உடனான தற்போதைய மற்றும் வருங்கால ஒப்பந்தங்கள் குறித்து தங்கள் உள்நாட்டு ஆய்வை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.குறிப்பாக தற்போதை போர் சூழலை ஒரு எதிர்பாராத பேரிடராகக் கருதி, ஒப்பந்தங்களில் உள்ள 'போர்ஸ் மஜூர்' எனும் தவிர்க்க முடியாத சூழல் என்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி ஒப்பந்தங்களில் இருந்து விலக முடியுமா என ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதாலும், எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதல்களாலும் வருவாய் குறைந்துள்ளது மற்றும் ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது போன்ற காரணங்களே இந்நாடுகளின் இம்முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நாடுகள் உலகின் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிதி நிறுவனங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தன.

இப்போது இந்த முதலீடுகள் திரும்ப பெறப்பட்டால், அது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இருந்து இந்நாடுகள் விலகுவது, ஈரானுடனான போரை நிறுத்த அமெரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.






      Dinamalar
      Follow us