கனடாவில் குருத்வாரா மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
கனடாவில் குருத்வாரா மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
ADDED : ஏப் 20, 2025 06:05 PM

வான்கூவர்: கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி உள்ளனர்.
நேற்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குருத்வாரா 1906ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக குருத்வாரா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ' காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் பயங்கரவாதிகள் சிலர் , புனிதமான வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்து சேதப்படுத்தியதுடன் பிரிவினைவாத கோஷம் எழுப்பி சென்றனர். இச்சம்பவம் எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
கனடாவில் வாழும் சீக்கிய சமுதாயத்தினர் மத்தியில், பயத்தையும் பிரிவினையை தூண்டவுமே இத்தகைய செயலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் செயல் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு மாறாக எங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகள் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.