உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : டிச 15, 2025 01:04 AM

அ நிறம் | அளவு
ஜெருசலேம்: காசா அருகே நடத்தப்பட்ட தாக்குதலில்: மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசாவின் அல் ரஷீத் நகர் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
அப்பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்த ஒரு காரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமை ப்பின் முக்கிய தளபதியான ரயத் சாத் மற்றும் அவருடன் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலுக்கு, ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு, ரயத் சாத் மூளையாக செயல்பட்டதால், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
