ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மாயம்: இறந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மாயம்: இறந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ADDED : செப் 24, 2024 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே காசா பகுதியில் கடந்த ஓராண்டாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் துவங்கியது முதல் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் காணவில்லை. அவர் யாருடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வருவதால் அவர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.
சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டிருக் கலாம் எனவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவ புலனாய்வு இயக்குனரகமும் இதே தகவலை கூறியுள்ளது. எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை.

