7,000 வீரர்களை திரும்ப பெறும் ஹமாஸ்; வீடுகளை நோக்கி நகரும் மக்கள்
7,000 வீரர்களை திரும்ப பெறும் ஹமாஸ்; வீடுகளை நோக்கி நகரும் மக்கள்
ADDED : அக் 11, 2025 10:34 PM

காசா; காசா முழுவதும் 7000 வீரர்களை ஹமாஸ் திரும்ப பெற துவங்கி உள்ளது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தத்தின் முதல்கட்ட உடன்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. பிணைக்கைதிகளை ஒப்படைக்கும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கின்றன. பிணைக்கைதிகளை ஏற்க இஸ்ரேலும் ஆயத்தமாகி வருகிறது
போர் பூமியில் குண்டுகள் சத்தம் ஓய்ந்துவிட்ட நிலையில், மக்கள் தங்களின் இருப்பிடங்களை நோக்கி மெல்ல, மெல்ல இடம்பெற தொடங்கி உள்ளனர். நீண்ட தொலைவு அவர்கள் நடந்தபடியே செல்கின்றனர்
அதேநேரம் காணாமல் போன பாலஸ்தீனியர்களை இடிபாடுகளில் தேடும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. 9500 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மீண்டும் உள்நாட்டில் ஏதேனும் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சம் ஒருபக்கம் நிலவுகிறது. அதை போக்கும் வகையில் கிட்டத்தட்ட 7000 வீரர்களை, ஹமாஸ் இயக்கம் திரும்ப அழைத்துள்ளது.
மேலும், போருக்கு பிந்தைய காசாவை யார் ஆட்சி செய்வது என்பது குறித்த நிச்சயமற்ற நிலைமையும் அங்கு காணப்படுகிறது.